கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிய முன்னாள் போராளிகளை நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவீரர்களுக்கான பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்பில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.சம்சநாதன் செய்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த பேராளிகளை இன்று விசாரணை செய்த பின்னர் பொலிஸார் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் செயற்பாடுகள் கிளிநொச்சி பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்பில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.சம்சநாதன் செய்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த கட்டுமாணப் பணிகளை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பிற்பகல் 12.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இணைந்து இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளனர்.
எனினும் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் கல்லறை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அரசியல்வாதிகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும் வைத்து அரசியல் செய்வதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளி ச.ஈசன் கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற மாவீர் தின நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அரசியல் அசிங்கத்தை அரங்கேற்றியதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளி அ.ஈழம் சேகுவார தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இருக்கக் கூடிய அரசியல் சூழ்நிலையில், இன்று குறித்த மாவீர் துயிலும் இல்லத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இடித்து அழித்துவிட்டு, அரச புலனாய்வுப் பிரிவினரோ இதனைச் செய்தனர் என ஊடகங்களுக்கு செய்திகளை வெளியிடலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த முன்னாள் போராளிகள் இன்று அவர்களிடம் வேலைவாய்ப்பிற்காக கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஏ.பிரபாகரன் கவலை வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 12.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இணைந்து இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளனர்.
யுத்த நிறைவடைந்த பின்னர் உடைக்கப் பட்டிருந்த கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த கல்லறை அமைக்கும் பணி இன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் படையினர் வசமிருந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் கடந்த வருட இறுதியில் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டது.
யுத்தத்தின் பின்னர் முதன்முறையாக கடந்த 2016 ஆம் ஆண்டு மாவீரர் தினத்தில், அங்கு துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.