இன்றைய ராசி பலன்கள் 07.01.2017

  • மேஷம்

    மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: திட்டமிட்டவை தாமதமாகும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்துச் செல்லும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் நீங்களே முடிவெடுக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

  • கடகம்

    கடகம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதித்துக் காட்டும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தடைகள் உடைப்படும் நாள்.

  • கன்னி

    கன்னி: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். பொறுமைத் தேவைப்படும் நாள்.

  • துலாம்

    துலாம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுய
    ரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • மகரம்

    மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாயாருடன் மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

  • மீனம்

    மீனம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.