இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அமெரிக்காவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் போன்ற ஒருவர் அவசியம் என வழக்கறிஞர் கோமின் தயாரிசிறி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வழக்கறிஞர் மனோஹர டி சில்வாவின் புத்தகம் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டினை போன்று தலைவர்களை உருவாக்கிக் கொண்டு இலங்கை பயணிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.