ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை எதிர்வரும் 16ஆம் திகதி மேற்கொள்ள உள்ளார்.
குறித்த விஜயம் தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு 16ஆம் திகதி பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த 04 ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவிருந்த நிலையில், தவிர்க்கமுடியாத காரணத்தினால் அந்த விஜயம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.