போர்க்குற்ற விசாரணைகளுக்கு கலப்பு நீதிமன்றம் தேவையில்லை என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு!

போர்க்குற்ற விசாரணைகளுக்கு கலப்பு நீதிமன்றம் தேவையில்லை என்பதே ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் நிலைப்பாடு என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

போர்க் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதவான்களுடன் கூடிய கலப்பு நீதிமன்றின் அவசியம் எதுவுமில்லை என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும்.

ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு கருத்துக்களை வெளியிட முடியும் என்ற போதிலும் ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியமில்லை என்பதே அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாடாகும்.

நீதி விசாரணைப் பொறிமுறைமை தொடர்பில் உள்நாட்டு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.