தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விரைவில் தமிழக சட்டசபையின் சபாநாயகராக அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரை முதல்வர் இருக்கையில் அமர வைக்க அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
எனவே, பன்னீர் செல்வத்திடமிருந்து பொருளாலர் பதவியும் விரைவில் பறிக்கப்படும் எனத் தெரிகிறது. ஒரே சமயத்தில் முதல் அமைச்சர் மற்றும் பொருளாலர் ஆகிய இரண்டு பதவிகளையும் பறித்தால் அது தனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தலாம் என சசிகலா அஞ்சுவதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் தன்னுடைய ஆதரவாளர்களை சேர்த்துக்கொண்டு தங்களுக்கு எதிராக செயல்பட துவங்கினால் அது தங்களுக்கு பாதமாக அமைய வாய்ப்பிருப்பதாக சசிகலா தரப்பினர் கருதுகிறார்களாம்.
எனவே அவர் சபாநாயகராக விரைவில் அறிவிக்கப்படலாம். அப்போது அவராகவே பொருளாலர் பதவியை ராஜினாமா செய்து விடுவார். மேலும், அவரிடமிருந்து அதிகாரங்களை பறித்து கொள்ளலாம், கட்சி விவகாரங்களிலும் அவர் தலையிட முடியாது என கருதுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது படிப்படியாக முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை ஓரங்கட்டும் செயலாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.