பொலிஸ் அவசர தொடர்பாடல் தொலைபேசி எண் (119) இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது என பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது.
119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்தில் அடிக்கடி ஏற்படுகின்ற குறைபாடுகளை தவிர்த்துக் கொள்வதற்காகவே எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் 6 மணிவரை செயற்படாது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளால் குறித்த தினத்தன்று வருகை தர முடியாதுள்ளமையினால் திருத்தப் பணிகள் இடம்பெறாது என்று பொலிஸ் தலைமையகம் இன்றைய தினம் அறிவித்துள்ளது.