அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான விபரங்களை உடனடியாக கையளிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இறுதியாக அறிவித்துள்ளார்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர் 8 பேரும் இதுவரை தமது சொத்து விபரங்கள் பற்றிய அறிக்கையை ஆணைக்குழுவிடம் கையளிக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாகவும் இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சொத்து விபரங்கள் தொடர்பான அறிக்கையை கையளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது.
அவர்கள் தமது சொத்து விபரங்களை சபாநாயகரிடம் கையளித்திருந்தால், அது பற்றி உடனடியாக அறிய தருமாறும் ஆணைக்குழு கோரியுள்ளது.
இந்த இறுதி அறிவிப்புக்கு பின்னர், சொத்து விபரங்களை வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு அறிவிப்பது எனவும் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.