சூர்யா, கார்த்தி இணைந்து நடத்தும் சிவகுமாரின் சித்திரச்சோலை கண்காட்சி கோயம்புத்தூரில் 3 நாட்கள் நடைபெறுகிறது. தன்னிகரில்லா நடிகர் சிவகுமாரின் 75–வது பிறந்தநாளை சென்னையில், அவர் வரைந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி விழா நடத்தி சூர்யா மற்றும் கார்த்தி தந்தையின் வாழ்த்துகளை பெற்றனர். இந்த கண்காட்சியை பல்லாயிரகணக்கான பொதுமக்களும், சினிமா மற்றும் பிரபலங்களும் கண்டுகளித்தனர்.
இதனைதொடர்ந்து, வரும் 14,15,16 தேதிகளில் கோயம்புத்தூர் மக்கள் கண்டுகளிக்கும் விதமாக அங்கும் கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சி 14–ம் தேதி மாலை 5 மணி முதல் 8 மணி வரையும், 15,16 தேதிகளில் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணிவரையும் நடைபெறுகிறது.
சூர்யா, கார்த்தி இணைந்து நடத்தும், சிவகுமாரின் சித்திரச்சோலை ஓவியகண்காட்சியில் தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை சிவகுமார் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.