அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு 840 மில்லியன் ரூபாவினை செலுத்துமாறு ரக்னா லங்கா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நட்ட ஈடாக இந்தத் தொகையை வழங்குமாறு சிங்கப்பூரின் சியாக் என்ற வர்த்தக பிணக்குகளைத் தீர்க்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச சட்டங்களுக்கு அமைய இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியாக நடத்தப்பட்டு வந்த நிறுவனமொன்றை குழப்பியதாக அவன்ட் கார்ட் நிறுவனம், ரக்னா லங்கா நிறுவனம் மீது குற்றம் சுமத்தி சர்வதேச வர்த்தக நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
சட்ட ரீதியாக நடத்தப்பட்டு வந்த வர்த்தகமொன்றை சட்டவிரோதமான முறையில் அபகரித்தமை தொடர்பில் அவன்ட் கார்ட் நிறுவனம், இலங்கைக் கடற்படையினரிடம் 2300 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியும் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக அவன்ட் கார்ட் நிறுவனத் தலைவர் நிசாங்க சேனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கிடைக்கும் நட்ட ஈடுகளின் ஊடாக, தொழில் வாய்ப்புக்களை இழந்த அவன்ட் கார்ட் பணியாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.