நாடு முழுவதும் 100 சதவீத மின்சாரத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் 24 மணித்தியாலயங்களுக்கு தடையற்ற மின் விநியோகத்தினை வழங்குவதில் இலங்கை பின்னடைவை சந்திக் நேரிடலாம்.
எனவே 100 சதவீதம் தடையற்ற மின்சாரத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பின்தங்கிய பிரதேசங்கள் உட்பட நாடு முழுவதும் மின்சார விநியேகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு இன்றைய தினம் கருத்து தெரிவித்த போதே மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.