நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் எவ்வாறு ஹம்பாந்தோட்டையில் நேற்று நிகழ்வு நடத்தப்பட்ட இடத்தை நெருங்கினார்கள் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவில் பாரிய பிரச்சினை காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிகழ்வு நடைபெறும் பகுதியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் வீதித் தடைகள் போடப்பட்டு தெரிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான ஓர் நிலையில் நிகழ்வு நடைபெறும் இடத்தை அண்மித்து நாமலின் ஆதரவாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
பிரதமர் நிகழ்வு மேடைக்கு வருவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
நிகழ்வு நடைபெறும் பகுதியை அண்மித்த மூன்று பாதைகளும் மூடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்வில் பங்கேற்றிருந்தவர்கள் நாமலின் ஆதரவாளாகள் மீது பதில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
விசேட அதிரடிபபடையினர் தலையீடு செய்து பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
மோதல்கள் உக்கிரமடைந்திருந்தால் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கொழும்பு சிங்கள இணைய தளமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது இலங்கைக்கான சீனத் தூதுவரும் நிகழ்வு நடைபெறும் இடத்தில் பிரசன்னமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே எவ்வாறு நாமலின் ஆதரவாளர்கள் உள்ளே பிரவேசித்தார்கள் பிரபுக்களின் பாதுகாப்பு குறித்து அசமந்தமான போக்கு ஏன் பின்பற்றப்பப்பட்டது என்பது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.