எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் அரசியலில் களமிறங்கும் தீபா! அச்சத்தில் மன்னார்குடி கோஷ்டி!

சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகி விட்டாலும், அவருக்கு எதிரான அலையே கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.

சசிகலாவை வெறுக்கும் அதிமுக தொண்டர்கள் பலர் தினமும் ஜெயலலிதாவின் இரத்த சொந்தமான அவர் அண்ணன் மகள் தீபா வீட்டுக்கு சென்று, அரசியலுக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற தீபா தற்போது தீர்க்கமாக முடிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது, மக்கள் விருப்பப்படி, அரசியலுக்கு வர உள்ளேன். என அரசியல் பிரவேசம் கண்டிப்பாக விரைவில் இருக்கும்

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளான வரும் 17ஆம் திகதி மக்களுக்கு நல்ல செய்தியை கூறுகிறேன். மக்களின் கருத்துக்களை கேட்க, அவர்களுடன் கலந்துரையாட உள்ளேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் சசிகலா மீது அதிருப்தி கொண்ட அதிமுகவின் முக்கிய பெரும் புள்ளிகள் தீபாவை சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது

கட்சியினர் மத்தியில் மட்டுமில்லாமல் பொது மக்கள் மத்தியிலும் தீபாவுக்கு கிடைக்கும் வரவேற்ப்பை பார்த்து மன்னார்குடி கோஷ்டி கலக்கமடைந்துள்ளது.