ஜெயலலிதாவை செல்லாக்காசு என முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியதாவது செய்தி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முன்னால் அமைச்சராக இருந்த வளர்மதி, ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தஞ்சையில் சூலாயுதத்தை பெற்றுக்கொண்டதும் ஜெயலலிதா தன்னை பத்திரகாளியாகக் கருதிக் கொண்டு நரபலிக்கு ஆட்களை தேடி கடைசியாக சைதை துரைசாமி மற்றும் பி.ராமலிங்கம் போன்றவர்களை காயப்படுத்தியுள்ளார்.
மேலும், அம்மையாரைப் போலச் சினிமாவில் செல்லாக்காசு ஆனவுடன் பின்னால் அரசியலுக்கு வந்தவளல்ல என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த அறிக்கை எந்த திகதியில் மற்றும் எந்த நாளிதழில் வெளியான என்பது குறித்த தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை. அவரின் அறிக்கை அடங்கிய அந்த பத்திரிக்கை துண்டு மட்டும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.