ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு அடிக்காத யோகம் ஒ.பி.எஸ்க்கு அடித்துள்ளது: என்ன தெரியுமா?

வருகிற ஜனவரி 26 ஆம் நாள் நடைபெறும் குடியரசு தினவிழாவில் சென்னையில் ஆளுநருக்கு பதிலாக முதல்முறையாக முதல்வர் பன்னீர்செல்வம் கொடியேற்ற உள்ளார்.

இதுவரை தமிழகத்திற்கு நிரந்தர கவர்னர் நியமிக்கப்படாததால் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில், வருகிற ஜனவரி26 ஆம் நாள் குடியரசு தினவிழாவில் தற்போது பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் மும்பையில் கொடியேற்றும் நிலை இருப்பதால் அதே தருணத்தில் செனையில் கொடியேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆளுநருக்கு பதிலாக சென்னை கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக முதல்வராக இருக்கும் ஒ.பன்னீர்செல்வம் கொடியேற்ற வேண்டும் என்று ஆளுநர் மாளிகையிலிருந்து கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் குடியரசு தினத்துன்று தேசியக் கொடியேற்றும் முதல் முதலமைச்சர் என்ற பெருமையை ஓ.பன்னீர் செல்வம் பெறவிருக்கிறார்.