இந்த அறிகுறிகள் உள்ளதா? அப்போ அது மூளைப் புற்றுநோய் தான்!

மூளைப் புற்றுநோயானது, நமது மூளையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சி மற்றும் அதனுடைய பெருக்கம் காரணமாக ஏற்படுகிறது.

மூளைக் கழலையை ஏற்படுத்தும் செல் தொடர்பான கோளாறுகள் இரண்டு வகைப்படும். முதல் வகை மூளையில் வளரும். இரண்டாவது வகை உடலில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள்.

இந்த மூளைப் புற்றுநோயினால், இறப்பு விகிதமும் மிக அதிகம் எனவே இதற்கான அறிகுறிகளை தெரிந்துக் கொண்டு அதற்கான சிகிச்சையை ஆரம்பத்திலேயே செய்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

மூளைப் புற்றுநோயின் அறிகுறிகள்
  • நம்மை அறியாமல் கீழே விழுவது, சாதார வேலையை செய்வதில் கஷ்டப்படுவது, பொருட்களை தவறவிடுவது, இது போன்ற தடுமாற்றங்கள் மற்றும் நரம்புகள் பலவீனம் அடைதல் இந்த அறிகுறிகள் இருந்தால், அது மூளைக் கழலை நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
  • மூளைக் கழலை நோய் அதிகரிக்கும் போது, நமது கைகள் மற்றும் கால்களில் உணர்ச்சி அற்று இருக்கும். மேலும் நமது உடல் முழுவதும் ஒருவித கூச்ச உணர்வுகள் மற்றும் ரத்தழுத்தம் குறைந்து காணப்படும்.
  • சில நேரங்களில் குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது வார்த்தைகள், முதலியவற்றை மறந்து விடும் நிலைகள் ஏற்பட்டு பல குழப்பங்கள் மனதில் தோன்றினால் அதுவும் மூளைக் கழலை நோயிக்கான அறிகுறிகளாகும்.
  • வெளிப்படைக் காரணம் எதுவும் இல்லாமல் குமட்டல் அடிக்கடி ஏற்பட்டால், அது மூளைக் கழலை நோயின் மிக நுட்பமான அறிகுறிகளில் ஒன்றாகும்.
  • நமது கண்களை சோதனை செய்யும் பொழுது அதில் எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் மங்கலான பார்வை தெரிந்தால், அது மூளைக் கழலை நோயின் அறிகுறியாகும்.
  • மூளைக் கழலை நோய் இருந்தால், சிலருக்கு பேசுவதில் சிரமம் மற்றும் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சிரமத்தை சந்திக்கின்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  • நமது முகத்தின் பல்வேறு பகுதிகளில் கூர்மையான வலிகள் ஏற்பட்டால், அது நிச்சயமாக மூளைக் கழலை நோயின் மற்றொரு முக்கிய அறிகுறியாகும்.