80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்..!

கடந்த வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 80 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

பின்தங்கிய பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு கோட்டா முறையில் பல்கலைக்கழகத்துக்கான அனுமதி வழங்கப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த சிறப்புச் சலுகையைப் பெற ஏனைய பகுதி மாணவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்கு சென்று பரீட்சைகளை எழுதுவதாக தெரியவந்துள்ளது.

எனவே, கல்வி அமைச்சினால் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த விவகாரம் குறித்து ஆறு அதிபர்களை பணி நீக்கம் செய்ய கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.