இலங்கையின் கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகள் தொழிலில் ஈடுபடாது என்பதற்கான எழுத்துமூல உறுதியை இலங்கைக்கு வழங்க இந்தியா மறுத்துவிட்டது.
இலங்கையின் ஆங்கில இதழ் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
எனினும் இலங்கையின் இந்தக்கோரிக்கையை எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் திகதியன்று நடைபெறவுள்ள இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடலின்போது முன்வைக்கவுள்ளதாக இந்திய தரப்பு தெரிவித்துள்ளது
இலங்கையின் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இந்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோஹன் சிங் ஆகியோரின் தலைமையில் கடந்த வாரம் மீனவர்கள் தொடர்பான பிரச்சினை புதுடில்லியில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது ஆழ்கடல் மீன்பிடிக்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளமையால், இலங்கையின் கடற்பரப்புக்கள் இந்திய இழுவைப்படகுகள் வருவதை தடுக்கலாம் என்று இந்திய தரப்பினர் தெரிவித்தனர்.
இந்தநிலையிலேயே இந்த உறுதியை எழுத்துமூலம் தரவேண்டும் இலங்கையின் அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்தார்.
எனினும் உடனடியாக இந்தக்கோரிக்கையை தாம், ஏற்றுக்கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.