அரசியல் பயணத்தை அதிரடியாக அறிவித்த தீபா!!

எம்ஜிஆர் நூற்றாண்டு தொடங்கும் 17 ஆம் திகதி என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பம் என தீபா அதிரடியாக அறிவித்துள்ளார்.

நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டு பால்கனியில் நின்றவாறு தொண்டர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் மீது வைத்திருந்த அன்பின் காரணமாகவே நீங்கள் அனைவரும் என்னை பார்க்க வந்துள்ளீர்கள்.

இதனால், ஜெயலலிதாவின் புகழையும், பெயரையும் நிலைநாட்ட நாம் முழுமையாக செயல்படுவோம்.

என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்.

எம்.ஜி.ஆருடைய ஆசியும், ஜெயலலிதாவின் ஆசியும் நமக்கு தேவை. இதனால் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டான வரும் 17–ந்தேதி முதல் என்னுடைய அரசியல் பயணம் தொடங்கும். நல்ல எதிர்காலத்திற்காக நம் பயணம் தொடரும் என கூறியுள்ளார்.