வங்காள தேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
கோரி ஆண்டர்சன் பந்தை சிக்சருக்கு தூக்கிய காட்சி
மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஓவரின் முதல் இரண்டு போட்டியில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இன்று நடந்தது.
கேன் வில்லியம்சன் பந்தை பவுண்டரிக்கு விரட்டுகிறார்
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. ஆண்டர்சன் 41 பந்தில் 94 ரன்னும் (2 பவுண்டரி, 10 சிக்கர்), வில்லியம்சன் 60 ரன்னும் எடுத்தனர். ருபெல் ஹொசைன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
ட்ரென்ட் போல்ட் பந்தை பாய்ந்து பீல்டிங் செய்யும் காட்சி
பின்னர் 195 ரன்கள் என்ற கடின இலக்குடன் வங்காள தேசம் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து 20 ஓவர் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
சவுமியா சர்கார் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் காட்சி
அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் டெஸ்ட் 12-ந்தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.