விஜயின் ‘பைரவா’ படைக்கவிருக்கும் புதிய சாதனை!

பொங்கல் பண்டிகையில் ‘பைரவா’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘புரியாத புதிர்’ ஆகிய 3 படங்கள் மட்டுமே திரைக்கு வருகிறது. இதில் விஜயின் ‘பைரவா’ படத்திற்கு மாஸ் ஓப்பனிங் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ‘பைரவா’ படத்தில் விஜய் ‘அழகிய தமிழ்மகன்’ இயக்குநர் பரதனுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை விஜயா வாஹினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு  இசையமைத்துள்ளார்.

தணிக்கைக் குழு சோதனையில் ‘யு’ சான்றிதழை பெற்ற ‘பைரவா’ உலகம் முழுவதும் 55 நாடுகளில் ரிலீசாகிறது. வெளிநாடுகளுகளில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான ரைட்ஸை ஏ & பி குரூப் நிறுவனம் பெற்றுள்ளது. இதனையடுத்து அந்நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: ‘பைரவா’ படம் பொங்கலுக்கு முன்பாக வரும் 12ம் தேதி வெளியாகிறது. இதில் தமிழ் படத்திலேயே ‘பைரவா’ படமே முதன்முறையாக ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கானா, கென்யா, உகாண்டா,  சாம்பியா, தான்சானியா, போட்ஸ்வானா, காங்கோ, உக்ரைன், அல்பேனியா, மெக்ஸிக்கோ, லிதுவேனியா, லாட்வியா, போலந்து,  எத்தியோப்பியா, ருவாண்டா மற்றும் மாஸ்கோ உள்ளிட்ட 55 நாடுகளில் ரிலீசாகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகளவிலான (சுமார்  450) திரையரங்குகளில் ‘பைரவா’ வெளியாக உள்ளது. இதன்மூலம் முதல்நாள் வசூலில்  ‘கபாலி’, ‘வேதாளம்’, ‘தெறி’ படங்களின் வசூலை ‘பைரவா’ முந்த வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.