ஏலியனின் கை இப்படி தான் இருக்கும்! கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்

பெரு நாட்டில் உள்ள பழைய குகை ஒன்றில் அமானுட ஆராய்ச்சியாளர்கள் இராட்சத கையின் எலும்பினை கண்டுபிடித்துள்ளனர்.

அமானுட ஆராய்ச்சியாளர்கள் தென் கிழக்கு பெரு நாட்டின் கஸ்கோ நகரில் ஆராய்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த ஒரு பழைய பாலைவன குகையில் வழக்கத்திற்கு மாறான ஒரு இடத்தில் இருந்து இராட்சத கையின் எலும்பினை கண்டுபிடித்தனர்.

இந்த கை மிகவும் பெரிய அளவு கொண்டதாகவும், மூன்று விரல் மட்டும் கொண்டதாகவும், அது மிகவும் நீண்டும் காணப்பட்டது.

அதுமட்டுமல்லாது அந்தப் பகுதியில் பதப்படுத்தப்பட்ட ஒரு சிறிய ஏலியனும், பெரிய மண்டை ஓட்டையையும் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து அமானுட ஆராய்ச்சியாளர் Brien Foerster கூறுகையில், நான் இதை விற்க தயாராக இல்லை. இதில் மறைந்திருக்கும் உண்மைகளை கண்டுபிடிக்கவே முயல்கிறேன்.

இதனால் இந்த ஏலியன் கையை நான் கஸ்கோ நகரில் உள்ள விஞ்ஞானிகளிடன் ஒப்படைக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

ஏலியன்ஸ் தொடர்பான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பெரு நாட்டில் கிடைத்திருக்கும் இந்த ராட்சத கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.