மனிதர்களுக்கு அவர்களின் வாழ் நாளில் ஒரு முறையேனும் உடல் பாகங்களில் காயங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இவ்வாறு ஏற்படும் காயங்களை குணப்படுத்துவதற்கு தற்போது பேண்டேஜ்கள், பிளாஸ்டர்கள் காணப்படுகின்றன.
எனினும் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு படி மேலே சென்று காயங்களை குணப்படுத்தக்கூடிய செயற்கை சிலந்தி வலைகளை உருவாக்கியுள்ளனர்.
ஆன்டிபயோட்டிக்கினை கொண்டிருக்கும் இச் சிலந்தி வலைகள் காயம் ஏற்பட்ட இடங்களில் சுற்றிக் கட்டப்படும்.
இவ்வாறு கட்டப்பட்டதன் பின்னர் அவற்றிலிருந்து காயங்களை குணப்படுத்தும் மருந்து தானாகவே செலுத்தப்படுவதுடன், தொற்றுக்கள் ஏற்படுவதிலிருந்தும் தடுக்கும்.
இவ் வலையானது E. coli பக்டீரியாக்களிலில் இருந்து சுரக்கப்படும் சில்க் போன்ற திரவத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
மேலும் ஐந்து ஆண்டுகள் மேற்கொண்ட கடுமையான ஆராய்ச்சியின் விளைவாகவே தற்போது வெற்றிகரமாக இந்த செயற்கையான சிலந்தி வலை உருவாக்கப்பட்டுள்ளது.