மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் தற்போது நீங்கி வருகிறது. தற்போது இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பதுக்கலை தடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக் கையை மத்திய அரசு மேற் கொண்டது. ஆனால் எதிர்க் கட்சிகள் அதற்கு எதிராக செயல்படுகின்றன.
கடந்த 3 நாட்களில் நாடு முழுவதும் வரி வசூல் சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் வாட் வரி வசூல் அதிகரித்துள்ளது.
2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த டிசம்பர் மாதம் சுங்க வரி வசூல் குறைந்துள்ளது. தங்கம் இறக்குமதி குறைந்து போனதே அதற்கு காரணமாகும்.
மறைமுக வரி வசூல் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய சுங்கவரி வசூல் 31.6 சதவீதம் உயர்ந்துள்ளது.
மொத்த சுங்க வரி வசூல் 43 சதவீதமும், சேவை வரி வசூல் 23.9 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 2015-ம் ஆண்டை விட 2016-ல் நிறைய மாநிலங்கள் ஆதாயம் அடைந்துள்ளன.
இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.