‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் கவுதம் மேனன் அடுத்து, விக்ரமை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதி செய்த கவுதம் மேனன் ‘துருவ நட்சத்திரம்’ குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, `துருவ நட்சத்திரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் விக்ரம் கோட் & ஷீட்டில் கையில் செய்தித்தாளை வைத்தபடி ஷ்டைலிஷாக போஸ் கொடுக்கிறார். இதனிடையே, ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரம் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்தன.
`வாலு’ பட இயக்குநர் படத்தில் நடித்து வரும் விக்ரம் தற்போது கவுதம் மேனனுடன் இணைகிறார். இதற்கான படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தை உலக தரத்தில் எடுக்க முடிவு செய்துள்ள கவுதம், உலகின் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களை அழைத்துள்ளாராம். மேலும் படத்தை 2017 ஆகஸ்டில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
படத்தின் முக்கால்வாசி பாகத்தில் ‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக்கிலும், பிளாஷ்பேக்கில் இளமையான தோற்றத்திலும் விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. விக்ரம் – கவுதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.