லசந்த கொலை : கோத்தா, சரத், மஹிந்தவிடம் விசாரணை?

சண்டேலீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவையும் சரத் பொன்சேகாவையும் விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுத்துறையினர் அரசாங்கத்தின் உயர்ப்பீட அனுமதியை எதிர்ப்பார்த்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் இருந்து இந்த அனுமதியை அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

எனினும் அரசியல் காரணங்களுக்காக முக்கியமாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை மையமாகக்கொண்டு அவர்கள் இருவரும் இதற்கான அனுமதியை காலந்தாழ்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்த ராஜபக்சவுக்கும் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பிலான குரல் பதிவுகள் ஏற்கனவே இணையங்களில் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் கோத்தபாயவையும் சரத் பொன்சேகாவையும் விசாரணை செய்த பின்னரே மஹிந்த ராஜபக்சவை விசாரணை செய்ய முடியும் என்று குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.