அண்மையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மோதல் குறித்து பிரபல சர்வதேச சஞ்சிகையான போர்ப்ஸ் (Forbes) செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பதற்றமான சம்பவம் தொடர்பில் பெரிய அளவிலான பிரச்சாரம் ஒன்று போர்ப்ஸ் சஞ்சிகையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மக்களுக்கு சொந்தமான பாரிய அளவு காணிகளை வழங்குவதற்கு மக்களுக்கு விருப்பம் இல்லை. ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை சுற்றியுற்ற 15000 ஏக்கர் அளவிலான காணியை சீன தொழிற்சாலை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கினால் மக்களின் எதிர்ப்பு மற்றும் அதிருப்தி வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சியை எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் மாற்றுவதற்கு சமகால ஆட்சியாளர்கள் செயற்பட்டுள்ள போதிலும், பகிரங்கமாக தங்கள் நாட்டு அரசாங்கத்தை சிரமத்திற்குள்ளாக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செயற்படவில்லை எனவும் அந்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகி இரண்டு வருடம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் சீனாவுக்கு 80 வீதம் கிடைக்கும் வகையில் 99 வருடங்களுக்கு துறைமுகம் மற்றும் சுற்றியுள்ள 15000 ஏக்கர் காணியை 1.1 பில்லியன் டொலர் கடனை சமப்படுத்துவதற்கு சீனாவுக்கு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் சீன தொழிற்சாலையுடனான முதலீடு ஒன்றை இலங்கை பெற்றுக் கொள்வது நாட்டுக்கு சாதகமான ஒன்றாக காணப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
ரணில் அவ்வாறு கூறிய போதிலும், அந்த பிரதேச மக்கள் அதனை எற்றுக் கொள்ள விரும்பவில்லை எனவும் அந்த ஒப்பந்தத்திற்கமைய, தொழிற்சாலை வலயமைப்பு அமைப்பதற்காக சீனாவுக்கு காணி ஒப்படைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக அந்த சஞ்சிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்கு அரசாங்க ஆதரவாளர்களினால் பிரதேசத்தில் எதிர்ப்பு வெளியிட்ட மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது மிக பெரிய தாக்குதலாக மாறியுள்ளது.
அந்த எதிர்ப்பிற்கு தலைமை தாங்கிய பிக்குகள் உட்பட நபர்கள் காயமடைந்து வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக அந்த சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.