கருத்து வெளியிடும் ஜனநாயக உரிமையை எவராலும் பறிக்க இடமளிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கேகாலை – வரக்காபொல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இன மற்றும் மத ரீதியாக நாட்டை பிரிக்க போகும் நேரம்.ஒரு மொழியை பேசுவோருக்கு ஒரு மாகாணத்தை வழங்கி மற்றுமொரு மாகாணத்தை இணக்க போகின்றனர்.
சமஷ்டி அரச முறையையே அறிமுகப்படுத்த போகின்றன.புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டு வரப்படுகின்றனர்.
பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அரசியல் எதிரிகளின் குடியுரிமையை ரத்துச் செய்ய பார்க்கின்றனர்.
பலரது எதிர்ப்பு மத்தியில் அதிகார ஆசை கொண்டவர்களின் தேவைக்கு அமைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
பிக்குமாரை தாக்கியதையும் காவி உடைகளை எரித்ததையும் நேற்று நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்.
இதுதான் நல்லாட்சி. இல்லாவிட்டால் அப்படி தாக்குதல் நடத்த மாட்டார்கள்.
மத்திய வங்கியில் பட்டப்பகலில் நடந்த கொள்ளையை அனைவரும் மறந்து விட்டனர்.
இவர்கள் தொலைக்காட்சிகளையும் பத்திரிகைகளையும் ஆரம்பிக்க உள்ளன.இது குறித்து புரிந்து வேலை செய்ய வேண்டியுள்ளது.
பொலிஸார் தற்போது செய்வது அறியாது உள்ளனர். உயர் மட்டத்தில் இருந்து வரும் அரசியல் உத்தரவுகளையே பொலிஸார் செய்கின்றனர்.
அரசாங்கத்திற்கு எதிரானவர்களை அடக்க பொலிஸார் நீதிமன்றங்களை பயன்படுத்த தயாராகி வருகின்றனர்.
ஊடக அடக்குமுறை முன்னெடுக்கப்படுகிறது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.