வழக்கமாக, தனது டுவிட்டர் பக்கத்தின்மூலம் மக்களுடன் தொடர்பு வட்டாரத்தில் இருப்பதை விரும்பும் சுஷ்மா சுவராஜ் டுவிட்டர், பேஸ்புக் மூலம் மக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதில் அக்கறை காட்டி வருகிறார்.
அவரது அறிவுறுத்தலின்படி, உலகம் முழுவதும் 150 நாடுகளில் உள்ள இந்தியத் தூதரங்களை ஒருங்கிணைத்து ’இந்தியா மிஷன்’ எனும் டுவிட்டர் வலைத்தளக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள், தங்களது விசா, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் ஏதாவது சிக்கல் நேர்ந்தாலோ, பணிபுரியும் நாட்டில் உடல்ரீதியான சிரமங்களை எதிர்கொண்டாலோ, சட்ட ரீதியான உரிமைகளைப் பெறுவது தொடர்பாகவோ சம்மந்தப்பட்ட நாட்டிலுள்ள தூதரகங்களின் டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து புகார்களை பதிவு செய்யலாம்.
மேலும், தங்களது புகார்களுடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் டுவிட்டர் முகவரியான @SushmaSwaraj என்ற பெயரை இணைத்தால் நேரடியாக உங்கள் கோரிக்கையை நான் கண்காணிப்பேன். மிகவும் அவசரமான நடவடிக்கை தேவையெனில் #sos என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தலாம் எனவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.