சிறைக்கு செல்ல அஞ்ச மாட்டேன்!

சிறைக்கு செல்ல அஞ்சப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில், இந்த நாட்டு மக்களுக்காகவே நாம் சிறைக்கு செல்கின்றோம். எம்மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினாலும் பிரச்சினையில்லை.

ஹம்பாந்தோட்டையில் போராட்டம் நடத்தியமைக்காக பொலிஸார் எம்மை கைது செய்ய உள்ளனர். நாம் இவற்றுக்கு அஞ்சப் போவதில்லை இந்த நாட்டு மக்களுக்காகவே நாம் சிறைக்கு செல்கின்றோம்.

எம்மீது நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் சவர்க்காரம் வழங்கப்படவில்லை. பொலிஸார் எம் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

மாகாணசபை உள்ளூராட்சி மன்ற அரசியல்வாதிகள் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். எம்மை கைது செய்யும் வரையில் நாம் காத்திருக்கின்றோம்.

மேலும், எம்மை கைது செய்வதும் எம்மை தாக்குவதனையும் தவிர இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.