பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்த பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைக்கு பாபா குரு ராம் தேவ் பாராட்டு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், வருங்காலத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட வேண்டும் என்று பாபா குரு ராம் தேவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ராம்தேவ் பேசியதாவது:-
உயர் மதிப்பிலான நோட்டுகளின் பாதகமான விளவாக 2000 ரூபாய் நோட்டிலும் போலி நோட்டுகள் சந்தையில் புழகத்தில் வந்துள்ளது. தடை செய்யப்பட்ட மற்ற நோட்டுகளை போல் தற்போது இந்த நோட்டும் உள்ளது.
உயர் மதிப்பிலான நோட்டுகளை அச்சிட்டு கொண்டு செல்வது இன்னும் எளிமையாகிவிடும். அதனால் புதிய ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.