காசநோய்க்கு எதிராக விழிப்புணர்வு: அமிதாப் பச்சனுக்கு அமெரிக்கத் தூதரகம் கெளரவம்!

இந்தியாவில் காசநோய் பாதிப்புக்கு எதிராக தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டதற்காக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை, இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு.ஆர்.வெர்மா கெளரவித்துள்ளார்.
இந்த நிகழ்சியில் பேசிய அமிதாப் பச்சன், “காசநோய் ஆரம்பகட்டத்திலேயே குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் தான். எனவே பயப்படத் தேவையில்லை,” எனக் கூறினார். மேலும், இந்நோய் குறித்த விழிப்புணர்வில் பெண்கள் அதிகமாக ஈடுபடுவது வரவேற்கத்தக்கது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்
அமிதாப் பச்சன் ஏற்கனவே காசநோய் ஒழிப்பிற்கான சிறப்புத் தூதராக உள்ளார். மேலும், அவர் காசநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விருது பெற்ற புகைப்படத்தை, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.