ஈரானில் இருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் மொகமட் செய்ரி அமிரானியுடன் கலந்துரையாடல்கள் மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான ஈரான் தூதுவர்,
இலங்கைக்கு தேவையான மருந்துப் பொருட்கள் இறக்குமதி தொடர்பில் ஈரானிற்கு விஜயம் மேற்கொண்டு ஆராயுமாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரானுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் சேனாரத்னவிற்கு, ஈரான் தூதுவர் அழைப்பு விடுத்துள்ளார்.