யாழ். பல்கலைக்கழகத்தில் 32ஆவது பட்டமளிப்பு விழா!

யாழ். பல்கலைக்கழகத்தில் 32ஆவது பட்டமளிப்பு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த பட்டமளிப்பு விழா நாளைய தினமும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இதேவேளை, பட்டமளிப்பு விழாவின் போது 2151 மாணவர்கள் பட்டங்களை பெற்று கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், இந்த பட்டமளிப்பு நிகழ்வில் பெற்றோர்களும் கல்விமான்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.