தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியிலிருந்து நீக்கிய மத்திய அரசு தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பு தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கடும் போராட்டம் நடந்து வரும் நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கட்டாய விடுமுறை பட்டியலில் தசரா பண்டிகைக்குப் பதிலாக பொங்கல் பண்டிகையைச் சேர்க்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
இதே போல் ஜல்லிக்கட்டு விடயத்திலும் ஓர் நல்ல தீர்ப்பு வரும் என தமிழர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.