தேர்தலில் போட்டியிட யார் காரணம்..? மீண்டும் முதலமைச்சராக போட்டியிடுவாரா விக்கி..?

வடக்கு மாகாண சபையின் தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் அடுத்த பதவிக் காலத்துக்கு முதலமைச்சராகப் போட்டியிடுவீர்களா?

போட்டியிட்டால் எந்தக் கட்சியில் போட்டியிடுவீர்கள்? என்ற கேள்விக்கு, கனடாவில் வைத்து ஊடகவியலாளர்களிடம் பதிலளித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

காலம் இருக்கின்றது. கடந்த முறை வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு ஒரு மாதம் முன்னம் வரையில் நான் தேர்தலில் போட்டியிடுவதாக இருக்கவில்லை.

உங்களது அரசு (கனேடிய) செய்த காரியத்தினால்தான் நான் போட்டியிட வேண்டி வந்தது. 2013ஆம் ஆண்டு தேர்தல் வேட்பு மனுத் தாக்கலுக்கு ஒரு மாதம் முன்னதாக, கனடாவில் ஒரு நிகழ்வில் பங்குபற்றுவதற்காக நுழை விசைவுக்கு (விசா) விண்ணப்பித்திருந்தேன்.

கனேடிய அரசு எனது நுழை விசைவை நிராகரித்துவிட்டது. இதன் பின்னர் பல்வேறு தரப்பினரும் எனக்கு நெருக்குதல் கொடுத்தார்கள். அதனடிப்படையில் போட்டியிட்டேன்.

மீண்டும் அப்படியொரு அதிஷ்டம் கிடைத்தால் பார்ப்போம். அடுத்த தேர்தலுக்கு இன்னமும் காலம் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.