சர்வதேச பாடசாலைகள் பதிவு குறித்த தடை நீக்கம்!

சர்வதேச பாடசாலைகள் பதிவு தொடர்பில் காணப்பட்ட தடை நீக்கப்பட உள்ளது.

சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்து கொள்வதனை இடைநிறுத்துவதற்கு கடந்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்த தீர்மானத்தை ரத்து செய்து மீளவும் சர்வதேச பாடசாலைகளை பதிவு செய்வதற்கு அனுமதி வழங்க தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச பாடசாலைகளின் தரத்தை உயர்த்துவதற்கும், ஒழுங்கு விதிகளுக்கு உட்படுத்தவும் பொறிமுறைமை ஒன்றை உருவாக்கும் நோக்கில் கடந்த அரசாங்கம் சர்வதேச பாடசாலைகளுக்கான பதிவு அனுமதியை இடைநிறுத்தியிருந்தது.

எனினும், தற்போதைய அரசாங்கம் எவ்வித ஒழுங்கு விதிகளையும் வகுக்காது தடையை ரத்து செய்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கல்வித்துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.