போலியான செயற்பாட்டுகளை மேற்கொண்டமையினால் ராஜபக்சர்களுக்கு இறுதியாக இருந்த ஒரே சர்வதேச நட்பு நாடானா சீனாவும் முரண்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.
ராஜபக்ஷர்களின் செயற்பாடு காரணமாக சீனாவும், அவர்களுக்கு மீது கடும் கோபத்தில் உள்ளதாக தூதரக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் ஹம்பாந்தோட்டையில் சீன – இலங்கை தொழிற்சாலை ஆரம்ப நிகழ்வின் போது அதனை தடுப்பதற்காக ராஜபக்சர்கள் ஏற்பாடு செய்த சம்பவமே இதற்கு காரணமாகியுள்ளது.
இந்த நிகழ்விற்கு முன்னர் இலங்கையில் உள்ள சீன தூதரக அலுவலகத்தினால் ராஜபக்சர்களை அழைத்து தீர்மானிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ள நிலையில் இது ராஜபக்சர்கள் அதிகாரத்தில் இருந்த காலப்பகுதியில் யோசனை செய்யப்பட்ட திட்டம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அங்கு இதற்கு எதிராக மக்களை களமிறக்க எதிர்பார்க்கின்றீர்களா என்பது தொடர்பிலும் சீன தூதரக அலுவலகம் வினவியுள்ளது. தங்கள் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு வெளியிடவில்லை என இந்த கலந்துரையாடலில் கலந்துக் கொண்ட நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அங்கு சீன தூதரக அலுவலகத்தினால் நாமல் ராஜபக்சவிடம வாக்குறுதி ஒன்று பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ராஜபக்சர்களினால் அன்று வழங்கிய வாக்குறுதியினாலேயே ஹம்பாந்தோட்டைக்கு தங்கள் முதலீட்டாளர்களை சீனா அழைத்து வந்துள்ளது.
எப்படியிருப்பினும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியதல்ல மீற வேண்டியது என்ற கருத்திற்கு பழக்கமடைந்துள்ள ராஜபக்சர்கள் அன்றைய தினம் சீன – இலங்கை நிகழ்விற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டுள்ளனர்.
அதற்காக அன்றைய தினம் சீன தூதரக அலுவலகத்தில் வாக்குறுதி வழங்கிய நாமல் ராஜபக்ச, ஆர்ப்பாட்டத்தின் போது முன் வந்து கற்களை வீசி மக்களை தூண்டிவிட்டமை குறித்து சீனா கடுமையாக கோபமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யுத்தத்தின் ஆரம்பத்தில் ராஜபக்சர்களுக்கு ஆதரவு வழங்கிய அமெரிக்க, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ராஜபக்சர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் மீறியமையே அவர்களின் கோபத்திற்கு காரணமாகியது. தற்போது இறுதி நண்பரான சீனாவுக்கு போலி வாக்குறுதி வழங்கி பகைத்துக் கொண்டுள்ளனர் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.