ஜெ.வுக்கு தங்க சிலை..? சசியின் புதிய யுக்தி!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா பொறுப்பேற்று உள்ளார். இதனை அடுத்து முதல்வர் பதவியை பிடிக்க சசிகலா காய் நகர்த்தி வருகிறார். இவருக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடையே ஆதரவு இருந்தாலும், தொண்டர்கள் இடையே கடுமையான எதிர்ப்பு உள்ளது.

மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இது சசிகலா தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே தொண்டர்களின் ஆதரவை பெற சசிகலா புதிய டெக்னிக்கை கையாள உள்ளார். அதன்படி மாவட்டம் தோறும் ஜெயலலலிதாவுக்கு 6 அடியில் தங்க சிலை அமைக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இதற்காக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. சசியின் இந்த புதிய டெக்னிக் அதிமுக தொண்டர்களை தக்க வைக்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.