ஜப்பான் நாட்டை சேர்ந்த 11 வயது பீகில் இன நாய் ஒன்று தனது உரிமையாளர் மகோடா குமாகையுடன் சேர்ந்து 1 நிமிடத்தில் 58 முறை ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் இருவரும் சேர்ந்து 1 நிமிடத்தில் 51 முறை ஸ்கிப்பிங் செய்து சாதனை படைத்திருந்தனர். தற்போது அந்த சாதனையை இருவரும் முறியடித்துள்ளனர்.
‘புரின்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த நாய் உரிமையாளர் மகோடா வீசிய 14 மினி புட்பால்களை கோல் விழாமல் தடுத்தது, ஒரு பந்தின் மீது நின்று 10 மீட்டர் தூரத்தை 10.39 விநாடிகளில் கடந்தது என இதற்கு முன் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்திருக்கிறது.
”புரின் அடுத்து செய்யப்போகும் சாதனையைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என இதுகுறித்து கின்னஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.