பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான பாகிஸ்தான் அணியில் சர்பிராஸ் அஹமது இடம்பிடித்துள்ளார். இவர் துணைக் கேப்டனாகவும் உள்ளார்.
முதல் ஒருநாள் போட்டிக்கு சர்பிராஸ் அஹமது தயாராகி கொண்டிருக்கும் நிலையில், அவரது தாயார் உடல்நிலை சரியில்லாமல் கராச்சியில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி பாகிஸ்தான் அணிக்கு கிடைத்தது.
இதனால் சர்பிராஸ் அஹமது உடனடியாக பாகிஸ்தான் திரும்ப வாய்ப்புள்ளது என அந்த அணியின் மானேஜர் கூறியுள்ளார். ஏற்கனவே அந்த அணியின் உயரமான வேகப்பந்து வீச்சாளர் மொகமது இர்பான், தனது தாயார் இறந்ததால் பாகிஸ்தான் திரும்பியுள்ளார்.
அஹமதுவிற்குப் பதிலாக மொகமது ரிஸ்வான் என்ற மாற்று விக்கெட் கீப்பர் ஏற்கனவே அணியில் இடம்பிடித்துள்ளார். இதனால் மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.