மலையாள நடிகர் திலீப் முதலில் மஞ்சுவாரியரை காதலித்து திருமணம் செய்தார். அப்போது மஞ்சுவாரியரை ஒருபடத்தில் நடிக்க வைக்க பிரியதர்ஷன் முயற்சி செய்தார். அதற்கு திலீப் ஒப்புக் கொள்ளவில்லை. அதன்பிறகு மஞ்சுவாரியர் நடிக்கவில்லை.
மஞ்சுவாரியர் பிரிந்த பிறகு, இரண்டாவதாக காவ்யா மாதவனை திலீப் மணந்தார். சமீபத்தில் இந்த திருமணம் நடந்தது. அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க காவ்யா மாதவன் ஒப்புக் கொள்ளவில்லை. பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்வதை அவர் தவிர்த்து வருகிறார்.
முதல் கணவரான நிஷால் சந்திராவை திருமணம் செய்ய இருந்த போதும் காவ்யா மாதவன் திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்றார். எனவே, இப்போது நடிக்காமல் இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஒரு திறமையான நடிகை நடிப்பை கைவிட்டு இருப்பது வேதனையானது என்று மலையாள ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.