அஜித்திடம் பாராட்டு பெற்ற அனிருத்!

அனிருத் தற்போது அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இப்போது இவர் இசை அமைக்கும்  படங்களுக்கான பாடல்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே இசை அமைத்து கொடுத்து வருகிறார்.

அஜித்தின் 57-வது படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் பாடல்களுக்கு இசை அமைக்கும் அனிருத்  அதை பல்கேரியாவில் இருந்த அஜித், இயக்குனர் சிவா ஆகியோருக்கு அவ்வப்போது ஆன்லைன் மூலம் அனுப்பி ஒப்புதல் பெற்றார்.

இந்த படத்துக்கான அஜித்தின் ஒப்பனிங் பாடலுக்கு இசை அமைத்து விட்டார். இதை சமீபத்தில் சென்னை வந்த அஜித்திடம்  போட்டுக் காட்டியுள்ளார். அதை கேட்ட அஜித் இந்த பாடல் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார். இதனால்  அனிருத் உற்சாகமாக மற்ற பாடல்களுக்கு இசை அமைத்து வருகிறார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

அஜித்துடன், காஜல் அகர்வால், அக்‌ஷரா, இந்தி நடிகர் விவேக் ஓப்ராய் நடிக்கும் இந்த படத்திற்காக பல்கேரியாவில் எடுக்கப்பட்ட  காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.