சிரஞ்சீவி-பாலகிருஷ்ணா படங்களை வைத்து ரசிகர்கள் சூதாட்டம்!

தெலுங்கு திரையுலக சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட நாளுக்கு பிறகு படத்தில் நடித்து உள்ளார். `கைதி நம்பர் 150′ என்ற படம் பொங்கல் பண்டிகையை யொட்டி இன்று ரிலீஸ் ஆனது. சிரஞ்சீவிக்கு இது 150-வது படமாகும். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த  மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதேபோல் மற்றொரு முன்னணி நடிகரான பால கிருஷ்ணாவின் `கவுதமிபுத்ரா’ என்ற சரித்திர படம் நாளை வெளியாகிறது. ஏற்கனவே இந்த இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படும். சிரஞ்சீவி அரசியலில் ஈடுபட்டதால் நடிப்பை  நிறுத்தியதால் அது குறைந்து இருந்தது.

தற்போது சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட் டது.  சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மாறி மாறி திட்டி கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களில் எது வெற்றிபெறும் என்று ரசிகர்கள் பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரசிகர் கள் சூதாட்டத்தில் ஈடுபட்டாலோ, மோதலில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளனர்.