தோஷங்களை நீக்கும் அம்மன்

தஞ்சாவூர் மாவட்டம் திட்டையில் உள்ளது வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் குரு பரிகாரத் தலமாகவும் விளங்கி வருகிறது. சிவனும், சக்தியும் சமம் என்பதை உணர்த்தும் வகையில், இந்த ஆலயத்தில் இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இத்தல அம்மன் உலக நாயகி என்றும், மங்களாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். அம்மன் சன்னிதிக்கு மேலே உள்ள விமானத்தில், மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிக் கட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தந்த ராசிக்காரர்கள் தங்கள் ராசியின் கீழ் நின்று அம்மனை பிரார்த்தித்தால், அவர்களின் தோஷங்களை அம்பாள் நீக்குவார் என்பது நம்பிக்கையாகும். ராசிக்கட்டங்களின் வழியாக தோஷங்களை நீக்கும் இறை அதிசயம் இந்த ஆலயத்திலேயே நிகழ்கிறது.