நீங்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவீங்களா? அதில் உள்ள ஆபத்தையும் கொஞ்சம் தெரிஞ்சிகோங்க!

முக்கனியில் ஒன்றான வாழைப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.

ஆனால் அந்த வாழைப்பழத்தை நாம் தினமும் அதிகமாக சாப்பிட்டால், நன்மைகள் மட்டுமின்றி, சில பக்க விளைவுகளையும் சந்திக்கக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகள்
  • வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இந்தப் பழத்தை தினமும் அதிக அளவில் எடுத்துக் கொண்டால் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.
  • வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அது கடுமையான தலைவலியை ஏற்படுத்தும். ஏனெனில் அதில் தைரமைன் மற்றும் பீனைஎத்திலமைன் என்னும் அமினோ ஆசிட்டுகள் இருப்பதால், அவை நமது மூளையின் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலைவலியை ஏற்படுத்துகிறது.
  • இரவில் வாழைப்பழத்தை சாப்பிடும் பழக்கம் இருந்தால், அதை முற்றிலும் மாற்றிக் கொள்வது நல்லது ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும், புரோட்டீன் குறைவாகவும் இருப்பதால், இது மூளையில் ட்ரிப்டோஃபேனை அதிகரிக்கச் செய்து, தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
  • வாழைப்பழத்தை அதிக அளவில் சாப்பிட்டு வருவதால், அது ரத்த அழுத்தத்தில் இடையூறை ஏற்படுத்துகிறது. இதனால் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழைப்பழத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  • வாழைப்பழத்தை சரியான அளவில் எடுத்து வந்தால், அது நமது வயிற்றிற்கு நல்லது. அதுவே அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன், சிறுநீரகத்திலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  • ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவோர்க்கு, நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, பெரிய அளவிலான பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
  • இனிப்புச் சுவைகள் அதிகமாக நிறைந்த இந்த வாழைப்பழத்தை நாம் அன்றாடம் அதிகமாக சாப்பிட்டு வருவதால், பற்களை சொத்தையாக்கி, பற்கள் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்குகிறது.