கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு புளிப்பு, இனிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்கள் மீது அதிக நாட்டம் இருக்கும்.
அப்படியான நேரங்களில் புளிப்பு மற்றும் இனிப்புச் சுவைகளைக் கொண்ட கிவிப் பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.
ஏனெனில் இதில் கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை மற்றும் சர்க்கரை மிகவும் குறைவாகவே உள்ளது.
கர்ப்பிணி பெண்கள் கிவிப் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- கிவி பழத்தில் இருக்கும் ஃபோலேட் சத்துக்கள் நமது செல்களின் உருவாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் கிவிப் பழத்தை சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குழந்தைக்கு பிறப்பு குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கிறது.
- கிவி பழத்தில் விட்டமின் C ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை கர்ப்பிணிகள் சேர்த்துக் கொண்டால், அவர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். இதனால் கிவி பழம் மூளை செயல்பாட்டை சிறப்பாக்கி, கர்ப்பத்தால் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளையும் குறைக்கிறது.
- கிவி பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை கொஞ்சமாக இருப்பதால், இப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இனிப்பு உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறையும். மேலும் இதை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயைத் தடுக்கலாம்.
- கிவிப் பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இது கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
- கிவி பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வயிற்றில் உள்ள குழந்தையின் ஆர்.என். ஏ மற்றும் டி.என்.ஏ பாதிக்காமல் பாதுகாக்கிறது. மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, அடிக்கடி நோய்படுவதை தடுக்கிறது.
- கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மன வருத்தம், மிகுந்த சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு ஹார்மோன்கள் முக்கிய காரணமாகும். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் கிவிப்பழம் தடுக்கிறது.
குறிப்பு
ஆரோக்கியமாக மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கு, கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு மூன்று கிவி பழத்தை சாப்பிட்டு வரலாம். ஒருவேளை சிலருக்கு ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், கிவிப்பழம் சாப்பிடுவதை நிறுத்தி விடுவது மிகவும் நல்லது.