யாழ்ப்பாணத்தை தாக்கவேண்டும்..! – மைத்திரிக்கு எச்சரிக்கை.!

அண்மைக்காலமாக இலங்கையில் அதிகமாக விமர்சிக்கப்பட்டதோடு அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஓர் செய்தி ஜனாதிபதி இறக்கப்போகின்றார் என்பதே.

இது தொடர்பில் பொலிஸ்மா அதிபர் கவனம் வரையிலும் சென்றது எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து போனது. ஆனாலும் புதிதாக ஆட்சிக் கவிழ்ப்பு கதை உருவாகிவிட்டது.

இந்த நிலையில் விமல் கைது செய்யப்பட்ட தருணம் அவரது தமக்கை மகள் குறிப்பாக கைதுக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாத வகையில் அவர் தெரிவித்த வார்த்தைகள் பல விதமான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

விமல் கைதான போது அவரது தமக்கை மகள் எனப்படுபவர் ஊடகங்களிடம்,

“பெண்களுக்கு தாக்குவதா பூஜித் ஜயசுந்தரவின் கொள்கை, என்னை தாக்கினார்கள் நான் மரணித்திருந்தால் என்ன செய்வார்கள் என ஆட்சியையும் பொலிஸாரையும் கடுமையாக திட்டினார்.

பின்னர் “இந்த விடயங்களுக்கு கட்டாயமாக பதில் கிடைத்தே தீரும், இது பௌத்த நாடு, பௌத்தத்திற்கு பாதகம் விளைவிக்கும் எவருக்கும் நன்மை கிடைக்காது”

“கட்டாயமாக அவர்களுக்கு மரணம் கிடைத்தே தீரும் கூடிய விரைவில் மரணம் ஒன்று நடைபெரும், பௌத்த நாட்டிற்கு கை வைப்பவர்கள் எவருக்கும் இருக்க முடியாது மரணித்தே தீருவார்கள்.,

இந்த நிலை தொடர்ந்தால் நானும் அரசியலில் குதிப்பேன் எனவும் தெரிவித்தார்.

விமலின் கைதிற்கும் மரணத்திற்கும் என்ன தொடர்பு? குறிப்பாக மரணம் தொடர்பில் இவர் கூறியபோது சற்று தடுமாறியது ஊடகங்களில் காட்டப்பட்டுள்ளது.

அப்படி என்றால் விமலின் கைதுக்காக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது யாருக்கு? கைதோடு பௌத்தத்தை இணைத்து பேசியது ஏன் என்ற கேள்விகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அடுத்தது அதே சமயம் குறித்த பெண்ணின் தாய் (விமலின் தமக்கை) கருத்து தெரிவித்தபோது,

“பொலிஸாரின் வீரத்தை யாழ்ப்பாணத்தில் காட்டவேண்டும் அதனை விடுத்து விட்டு பெண்களிடம் காட்டுவதா? யாழ்ப்பாணத்தை தாக்க வேண்டும்..,

நான் இருந்திருந்தால் அனைத்தையும் நொருக்கியிருப்பேன் என்று ஆட்சியை திட்டுகின்றார்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தை தாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்த போது அங்கு இருந்தவர்களும் அதனை செய்ய மாட்டார்கள் அந்த வீரம் எவருக்கும் இல்லை என்று கூச்சலிட்டுள்ளனர்.

அந்த வகையில் விமலின் கைதினை இத்தனை பார தூரமாக சித்தரித்து மரணம் நிறைவேரும் எனவும் அவர்கள் தெரிவித்தது எதனால் என்பதற்கு பதில்கள் இல்லை.

இதேவேளை ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அண்மைக்காலமாக கருத்துகள் வெளியிடப்பட்டன.

பௌத்தத்திற்கு பாதகம் விளைவிக்கும் ஆட்சி நடத்துபவராக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றவர் மைத்திரியே அப்படி எனில் அவர்கள் கூறியது மைத்திரிக்கு விடுத்த எச்சரிக்கையாகவே நோக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

ஒட்டு மொத்தமாக இவர்கள் விமலின் கைதை பெரிது படுத்தி மக்களிடம் தெரிவித்துள்ள முக்கிய கருத்துகள் யாழ்ப்பாணத்தை தாக்க வேண்டும், நாட்டின் அதிபர் மரணமடைவார் என்பதே.

ஆவேசத்தில் கூறிய வார்த்தைகளாக இவை இருக்கலாமே என்ற சந்தேகம் எழலாம்., இங்கு எந்தவொரு ஆவேசமும் அந்த பிரச்சினையை தாண்டி சம்பந்தம் இல்லாத கருத்துகள் அதிலும் பொது இடத்தில் தெரிவிக்க எவரும் தயங்குவார்கள் என்பதே உண்மை.

அந்த வகையிலேயே ஆட்சி கவிழ்ப்பும், பௌத்தம் அழிக்கப்படுகின்றது என்பதை வலுப்படுத்தவும் நாட்டு மக்களை ஆட்சிக்கு எதிராக திசைதிருப்புவதனையும் மட்டுமே அழுத்திக் கூறுவதாக இந்தக் கருத்துகள் அமைந்தன.

ஒரு அரசியல்வாதியின் கைதினை இத்தனை பெரிய பிரச்சினையாக சித்தரிப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை தோற்று விப்பதற்கான செயலே எனவும் கூறப்படுகின்றது.