விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது தமிழ் மக்களின் அபிப்பிராயம்..!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் செயற்பாடுகள் குறித்து இப்பொழுதும் எப்பொழுதும் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தெளிவான அபிப்பிராயங்கள் போன்று சில அரசியல் கட்சிகளின் தலைமைகள் மத்தியில் காணப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் அரம்ப கால செயற்பாடுகள் தொடக்கம் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர்வரை தலைவர் பிரபாகரனினால் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக யார்..? எந்த விமர்சனங்களை முன்வைத்தாலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மத்தியில் அவரின் செயற்பாடுகள் தொடர்பாக இதுவரை எந்தவிதத்திலும் தவறான அபிப்பிராயங்கள் எழவில்லை என்றே கூறப்படுகின்றது.

ஆரம்ப கால செயற்பாடுகளில் இளைஞர் குழுக்கலாக ஆயுதம் ஏந்தி போராட முன்வந்த போது பிரபாகரன் நான் தான் தலைவன் என்று சொல்லி தலைவன் ஆகவில்லை.

எனைய இளைஞர்கள் ஒருமித்த குரலில் இவர்தான் தலைவன் என்றார்கள். அவர் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஏற்றுக் கொண்டார்.

பின்னர் புலிகளின் தாகம் தமிழிழத் தயகம் என்னும் கோசத்தை அவர், போராளிகள் மத்தியில் பலவந்தமாக தினிக்கவில்லை. போரளிகள் எல்லோரும் சேர்ந்துதான் கோசமெழுப்பினார்கள்.

ஆரம்பத்தில் சில தாக்குதல்களை தான் செய்யப் போவதாக போராளிகளுக்கு அறிவித்தாரே தவிர, நீங்கள் இதனை செய்யுங்கள் என்று கட்டளை பிறப்பிக்கவில்லை.

தாக்குதல்களில் நாங்களும் இணைந்து கொள்ளவிட்டால் அவர் தனித்து சண்டை செய்வார் என்பதை போராளிகள் புரிந்து கொண்டதன் மூலம் அனைவரும் இணைந்து போரிட்டனர்.

இவ்வாறு அவரின் செயற்பாடுகள் சர்வதிகாரத்துடன் இருக்கவிலை. இது போலவே சமதானக் காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அவர் தளபதிகள் மத்தியில் வெளிப்படுத்தி முடிவுகளை பெற்றாரே தவிர, தனித்து முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை.

எதுவாயினும் யார்..? எந்த முடிவை எடுத்தாலும், அது அந்த அமைப்பின் தலைமையைதான் சாரும் என்று எல்லோரும் கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

அதற்காக அரசியல் தலைவர்கள் சிலர் தமது கட்சி சார்ந்தவர்களுடன் தாம் தனித்து ஒரு முடிவை எடுக்கும் மனநிலைப்படி தலைவர் பிரபாகரனையும் நினைத்ததும், நினைப்பதும் தவறு என்பதே தமது கருத்து என சமூக ஆர்வலர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.