கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2015ல் வெளியான மெகா ஹிட் படம் ‘என்னை அறிந்தால்’. அஜித் கேரியரில் முக்கியமான படமாக அமைந்த ‘என்னை அறிந்தால்’ ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமைந்தது. இதில் அஜித் ஜோடியாக த்ரிஷாவும், காமெடியனாக விவேக் மற்றும் வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தை பிற மொழிகளில் டப்பிங் செய்ய முயற்சி செய்யப்பட்டது. இந்நிநிலையில், தற்போது, இப்படம் கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
கன்னடத்தில் பிறமொழிகளின் டப்பிங் படங்கள் நீண்ட நாட்களாக வெளியாகாத நிலையில், தற்போது அஜித் நடித்துள்ள `என்னை அறிந்தால்` படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.